Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தைக்கு கொரானா  தொற்று … அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! காரணம் குறித்து தீவிர ஆய்வு.!

இலண்டனில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கொரானா  வைரஸ் தொற்று இருப்பது சோதனை மூலம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையின் தாய் நிமோனியா சந்தேகத்திற்குரிய நிலையில் லண்டனில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு குழந்தை பிறந்தது. பிறந்து சில மணிநேரங்கள் ஆன குழந்தைக்கு பரிசோதனை செய்ததில் கொரானா உறுதி செய்யப்பட்டடுள்ளது. அவர்கள்  மருத்துவமனையில் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.

பிறப்பின் போது  தொற்று ஏற்பட்டதா, அல்லது கருப்பையில் வைரஸ் பாதிக்கப்பட்டதா என்பதை மருத்துவர்கள்  ஆராய்ந்து வருகின்றனர்.

அம்மா ஒரு சிறப்பு தொற்று மருத்துவமனைக்கு மாற்றப்பட்டநிலையில்  குழந்தை மருத்துவமனையில் உள்ளது.

ஆரோக்கியமான குழந்தைகளை பாதிக்கப்பட்ட அம்மாக்களிடமிருந்து பிரிக்கக்கூடாது என்றும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் ராயல் காலேஜ் ஆப் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

Categories

Tech |