லண்டனில் திருமணம் முடிந்தது தேனிலவு சென்ற போது தனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த இளம்பெண் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து மீண்டு வருகிறார்.
கிழக்கு லண்டன் பகுதியை சேர்ந்தவர் சார்லோட் டூடூன் டக்கர் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது அங்கு கேமிரான் என்ற இளைஞரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் நடந்தபோது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் உடனடியாக தம்பதியால் லண்டனுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் புதுமண தம்பதி தேனிலவுக்காக நியூ இங்கிலாந்து பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண் அங்கு குளிக்கும் போது தனது மார்பகத்தில் கட்டி இருப்பதை உணர்ந்தார். தொடர்ந்து அவர் வயிற்றில் தண்ணீர் மூழ்குவது போன்ற ஒரு உணர்வும் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துள்ளார். இந்த பரிசோதனையின் முடிவுகள் சில தினங்களுக்கு பிறகு மருத்துவரால் தொலைபேசி வாயிலாக கூறப்பட்டது. அந்த தொலைபேசி அழைப்பு அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடும் என கனவிலும் அறிந்திருக்க மாட்டார் சார்லோட்.
ஏனெனில் அதில் பேசிய மருத்துவர் சார்லோட்டுக்கு ஸ்டேஜ் 2 இன்வெஸ்டிவ் காரசினோமா மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது என மருத்துவர் கூறியிருந்தார். இதைக்கேட்டு மனம் நொறுங்கிப் போன சார்லோட் தற்போது தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் பிரித்தானியாவின் என்.ஹெச்.எஸ் ல் அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கொரோனா பரவல் காரணமாக தான் தனியாகவே சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.மேலும் தற்போது புற்றுநோயில் இருந்து முழுவதுமாக மீண்டுவருவதாகவும் மேலும் பெண்கள் தங்கள் உடலில் ஏதாவது மாற்றம் மற்றும் அறிகுறிகளை உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். பரிசோதனை என்பது முக்கியமான ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.