Categories
உலக செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பின்…. காமிக் கண்காட்சி…. பிரபல நாட்டில் களைகட்டும் திருவிழா….!!

லண்டனில் 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் காமிக் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

லண்டனில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காமிக் கண்காட்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காமிக் கண்காட்சி, இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மேலும் இங்கிலாந்தின் மிகப்பெரிய பாப் கலாச்சாரமாக லண்டன் MCM காமிக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் காலெண்டரில் உறுதியான இடத்தை பிடிக்கிறது.

இதில் பார்வையாளர்களை கவரும் வகையில் ஸ்குவிட் கேம், ஸ்பைடர்மேன், ஸ்டார்வார்ஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு பல்வேறு கலைஞர்கள் உலா வந்தனர். அதுமட்டுமின்றி, இந்த கண்காட்சியில் டீலர் ஸ்டால்கள், சிறப்பு விருந்தினர்கள், கேம்ஸ் ஆகியவற்றோடு மக்கள் கூட்டங்கள் காணப்படுகிறது. மேலும் மார்வெல் திரைப்படங்களை சேர்ந்த டாம் ஹிடில்ஸ்டன் MCM காமிக் லண்டனில் வந்து ரசிகர்களுக்கு, புகைப்படம் மற்றும் ஆட்டோகிராப் அளித்து மகிழ்விக்க உள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கான ட்ரீஹவுஸ் பகுதியில் கிரியேட்டிவ் பட்டறைகள், வெள்ளி பட்டாக்கத்தி பயிற்சி மற்றும் ரெட்ரோ கேமிங் பகுதியும் உள்ளது. அதோடு Cosplay சென்ட்ரலில், Cosplay ஷோகேஸ் கேட்வாக்கும் உள்ளது. அதில் பார்வையாளர்கள் திரைப்படங்கள் மற்றும் கிராஃபிக் நாவல்களில் இருந்து அவர்களுக்கு விருப்பமான முகங்களை அலங்கரிக்கலாம். மேலும் இது குறித்த தகவல்கள் MCM காமிக் கான் என்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Categories

Tech |