Categories
கிரிக்கெட் விளையாட்டு

லண்டன் ஓவல் டெஸ்ட் : வரலாறு படைத்த இந்திய அணிக்கு …. பிரதமர் மோடி வாழ்த்து ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த  டெஸ்ட் போட்டியில் 50 வருடங்களுக்கு  பிறகு  இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது .

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது .இப்போட்டியில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலமாக லண்டன் ஓவல் மைதானத்தில் 50 வருடங்களுக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது .

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில்,’தடுப்பூசி செலுத்தும் பணியிலும் கிரிக்கெட் மைதானத்திலும் மிகச் சிறந்த நாள் .எப்போதும் போல இந்தியா வெற்றி பெற்றுள்ளது ‘என இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் .அதேபோல் ஒரு கோடிக்கும்  மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைத்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |