லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் ஆடம்பர கார் ஒன்று திருடப்பட்டது. இந்த காரை பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராய்ச்சி மாவட்டத்தில் இருக்கும் சொகுசு பங்களா ஒன்றில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த காரின் விலை சுமார் 23 கோடி ஆகும். மேலும் இந்த காரின் பதிவும் போலியானதாக இருந்துள்ளது.
இதனையடுத்து சொகுசு காரினுடைய ஆவணங்களை வழங்காததால் வாகனத்தை விற்பனை செய்த தரகர் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஆகிய 2 போரையும் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் காரை கடத்தி வந்ததன் மூலம் ரூபாய் 30 கோடி வரி ஏய்ப்பு செய்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு கண்டம் தாண்டி கண்டம் காரை கடத்திச் செல்வதை கேட்கும்போது சற்று எச்சரிக்கையுடன் தான் இருக்க தோன்றுகிறது.