லண்டனில் மீண்டும் இரவு நேர சுரங்க ரயில் சேவைகள் நவம்பரில் இருந்து தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட இரவு நேர சுரங்க ரயில் சேவையானது மீண்டும் நவம்பரில் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 1,40,000 ஆயிரம் பேரின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்த நைட் டியூப் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்று மனு ஒன்றில் கையெழுத்திடப்பட்டது. இதனை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் நவம்பர் 27ஆம் தேதி முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மத்திய மற்றும் விக்டோரியா வழித்தடங்களில் இரவு நேர ரயில் சேவைகள் நடைபெறும் என்று லண்டன் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து துறை அளித்த தகவலின் படி, இரண்டு வழிகளில் கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததுபோல சேவைகள் நடைபெறும். மேலும் விக்டோரியா வழிகளில் பத்து நிமிட சேவையாக இருக்கும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஆறு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக White City மற்றும் Leytonstoneக்கு இடைப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ரயில் சேவைகள் நடைபெறும். இதனை அடுத்து Leytonstone -Loughton, Leytonstone -Newbury Park வழியாக 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ரயில்கள் இயக்கப்படும். இவை கிழக்கில் இருக்கும் ஹைனால்ட் வரையிலும் மற்றும் White City முதல் மேற்கில் உள்ள Ealing Broadway வரையிலும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நைட் டியூட்டி ரயில் சேவைகளின் முழு இயக்கத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் விரைவில் எடுக்கப்படும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் கூறியுள்ளார்.