Categories
உலக செய்திகள்

லண்டனில் பெய்த கனமழையால்…. முழங்கால் அளவுக்கு தேங்கிய நீர்…. மக்கள் அவதி….!!

லண்டனில் பெய்த கன மழையால் சாலைகள் மற்றும் கடைகள் வெள்ளபெருக்கில் மூழ்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர்

லண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜில் இன்று அதிகாலை பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்நிலை ஷாப்பிங் மாவட்டம் எனப்படும் இந்த பகுதி முழுவதும் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் நான்கு போக்குவரத்து வழித்தடங்களை மூடியுள்ளனர். அதோடு நைட்ஸ்பிரிட்ஜில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியதால் நடந்து செல்பவர்களும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாகன நெரிசல் காரணமாக மக்கள் கடும் அவதிப்படுவதாக லண்டன் போக்குவரத்து நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து Imperial Wharf ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கென்சிங்டன் மற்றும் கிளாபாம் சந்திப்பு ரயில் சேவைகள் முடங்கியுள்ளது. குறிப்பாக வெள்ளத்தால் போக்குவரத்து சிக்னல் செயலிழந்ததால் பெருநகரம், மாவட்டம், பிக்காடிலி உள்ளிட்ட வழித்தடங்களில் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |