நண்பருடன் காரில் சென்ற பெண்ணை ஓட்டுனர் வன்புணர்ச்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி 20 வயதான இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு விடுதிக்கு சென்று விட்டு அதிகாலை மூன்று மணிக்கு வெளியே வந்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் பதிவு செய்த கார் வந்தது என்று அதில் ஏறியுள்ளனர். ஆனால் கார் ஓட்டுனரோ அதனை வேறு திசையில் செலுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் சந்தேகம் ஏற்பட்டவுடன் ‘நீங்கள் மது அருந்து உள்ளீர்களா’என்று அவரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அந்த கார் ஓட்டுனர் மறுத்துள்ளனர். இதனையடுத்து இருவரும் கீழே இறங்கியுள்ளனர். அப்பொழுது அந்த பெண்ணின் நண்பரை கார் ஓட்டுனர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
மேலும் அப்பெண்ணை கார் ஓட்டுநர் வன்புணர்ச்சி செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த கார் ஓட்டுனரின் புகைப்படம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த புகைப்படத்தை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்த நபர் குறித்து எவரேனும் தகவல் அறிந்திருந்தால் உடனே போலீசாரை அணுகவும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.