Categories
உலக செய்திகள்

26 மாதங்களுக்கு பிறகு…. ஆடையின்றி நடத்தப்பட்ட சைக்கிள் பேரணி…. உற்சாகத்துடன் கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

உடம்பில் ஒட்டுத்துணி இன்றி பொது மக்கள் உற்சாகமாக சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர்.

லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் உலக நிர்வாண பைக் ரேட் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டது. இதனையடுத்து 26 மாதங்களுக்குப் பின்பு மீண்டும் லண்டனில் நடந்த இந்த பேரணியில் பல்வேறுகணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினர். இந்த சைக்கிள் பேரணியானது விக்டோரியா பூங்காவில் இருந்து ஹைட் பார்க் வரை நடைபெற்றது. இதில் மக்கள் முககவசம் இன்றி உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் சைக்கிளை மிக உற்சாகமாக ஓட்டிச் சென்றனர். மேலும் பலர் நிர்வாணமாகவும் சிலர் உள்ளாடை அணிந்தும், உடம்பில் வண்ணங்களை பூசியும் பேரணியில் சைக்கிள் ஓட்டினர்.

இதன் முக்கிய நோக்கமாக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு, உடல் சுதந்திரம், சைக்கிள் ஓட்டுவதற்கான விழிப்புணர்வு போன்றவை  கருதப்படுகிறது. இந்த சைக்கிள் பேரணியில் ஐந்தாவது முறையாக கலந்து கொண்ட எரிக் காலின்ஸ் என்பவர் கூறியதில் ” பேரணியின் முக்கிய காரணமாக அதிக அளவு கார் பயன்பாடு, எரிபொருள் விலை, உடல் சுதந்திரம் மற்றும் சைக்கிள் ஒட்டுபவர்கான உரிமைகள் போன்றவை இதன் முக்கிய குறிக்கோளாகும். நான் பல்வேறு முறை சைக்கிளில் சென்றுள்ள பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நான் சைக்கிள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இதில் கலந்து கொண்டேன்.

நாங்கள் இவ்வாறு ஆடையின்றி விழிப்புணர்வு நடத்துவது மற்றவரின் கவனங்களை ஈர்ப்பதற்காக மட்டுமே. எப்போதும் போல உடை அணிந்திருந்தால் அனைவரிடமும் கவனத்தை ஈர்க்க முடியாது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த பேரணியானது கடந்த 2003ஆம் ஆண்டில் கார் பயன்பாடுகளுக்கு எதிராக துவக்கப்பட்டது. இந்த சைக்கிள் பேரணியானது பல்வேறு நகரங்களில் பரவி வருகிறது. இது மாதிரி உடம்பில் ஒட்டுத்துணி இன்றி சைக்கிள் ஓட்டுவது லண்டன் வாசிகளுக்கு மிகவும் வழக்கமான ஒன்றாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |