100ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமாயவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமாயவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பின் கால பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் கோ பூஜையுடன் பட்டாச்சாரியார்களால் யாக வேள்வி பூஜைகள் தொடங்கியது. சாளகிராமம் அடங்கிய திருப்பேழைப் பெட்டி மற்றும் புனித தீர்த்தங்கள் அடங்கிய நான்காம் கால பூஜை பூர்ணாகுதி நிறைவுற்றது.
அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோபுர விமானத்தில் அமைக்கப்பட்ட கலசத்தில் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கருவறையில் வைக்கப்பட்ட திருப்பேழைப்பெட்டி, மற்றும் சாளக்கிராமங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பிறகு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் பூஜாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.