Categories
உலக செய்திகள்

அப்படி நினைக்காதீங்க.. நீண்ட நாள் இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

கொரோனா தொற்று நம்முடன் அதிக நாட்கள் இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று இன்னும் வெகு காலத்திற்கு இந்த கிரகத்தில் இருக்கும் எனவும் பல நாடுகள் தொற்றை கையாளுவதற்கான ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கின்றனர் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “தொற்றை கட்டுக்குள் வைத்துள்ளதாக நினைத்த சில நாடுகளில் மீண்டும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் சிக்கலான நிலையே உள்ளது.

மேற்கு ஐரோப்பாவில் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும் மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை நாம் காண்கிறோம். எந்த தப்பும் செய்யாதீர்கள் அதிக தூரம் எங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்த வைரஸ் நம்முடன் அதிக நாட்கள் இருக்கும். தொற்றை ஜனவரி 30 அன்று சரியான நேரத்தில் அவசர காலம் அறிவித்தோம். உலகம் பதிலளிப்பதற்கு தேவையான நேரம் இருக்கிறது என்று கூறியுள்ளார்

Categories

Tech |