பிரான்ஸ் நாட்டில் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் விநியோகம் பாதிப்படைந்து, வரிசையில் காத்திருப்பவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் சுத்திகரிப்பு நிலையங்களில் சம்பளம் வழங்குவது குறித்து இரு வாரங்களாக பணி நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை வைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உற்பத்தியானது, சுமார் 60 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்திருக்கிறது.
எனவே, பெட்ரோல் போடுவதற்கு மிக நீளமான வரிசையில் வாகனங்கள் காத்திருந்துள்ளன. இந்நிலையில் அதிக நேரமாக ஒரு நபர் சர்வீஸ் ஸ்டேஷனில் காத்திருந்துள்ளார். அப்போது ஒரு நபர் அவரை முந்தி செல்ல முயன்ற போது கோபம் அடைந்த அவர் அந்த நபரை கத்தியால் குத்தி விட்டார். இதில், அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் பிரான்ஸ் அரசு தங்கள் குடிமக்களுக்கு நடந்த பாதிப்பை சரி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.