Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீண்ட நேரம் செல்போன் பேச்சு… தாய் மாமன் கண்டித்ததால் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு!

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் துரைராஜ் தெருவைச் சேர்ந்தவர் மதுமிதா. 21 வயதாகும் இவர் கல்லூரியில் படித்து வருகிறார். மதுமிதா மற்றும்  அவரது தம்பி இருவரையும் தாய் மாமாமன்  சரவணன் என்பவர் தனது  வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
கல்லூரி மாணவியான மதுமிதா, எப்போதும் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் தாய்மாமன் சரவணன் மதுமிதாவை கண்டித்துள்ளார், மேலும் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி  வைத்துள்ளார். இதில் மனம் உடைந்த மதுமிதா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |