பிரபல நடிகை சுவாதி நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பிறகு திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
தமிழ் சினிமாவில் வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி. இதை தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார் சுவாதி. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.
அதன்பின் கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த விமானி விகாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த சுவாதி தற்போது மீண்டும் தெலுங்கு திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
அந்த வகையில் தெலுங்கில் உருவாகும் ‘பஞ்சதந்திரம்’ என்கின்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஷர்ஷா புலிப்புகா இயக்கும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.