பிரபல காமெடி நடிகர் வடிவேலு அவரது நீண்ட ஆண்டு நண்பரை பிரிந்து விட்டார்.
திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி, வில்லன் ஆகிய கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே போல காமெடி கதாபாத்திரத்திற்கும் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. ஏனென்றால் ஒருவரை தனது காமெடி திறமையின் மூலம் சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.
அப்படி தனது முழுத் திறமையையும் வெளிக்காட்டி இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் பிரபல காமெடி நடிகர் வடிவேலு. ஆனால் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பல வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மூலம் நம் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் மிக நெருங்கிய ஸ்நேகிதனான மற்றொரு காமெடி நடிகர் சிங்கமுத்து. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்குள் சில சொத்துக்கள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆகையால் இவர்களின் நீண்ட ஆண்டு நட்பில் பிரிவு ஏற்பட்டு தற்போது இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இச்செய்தி ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.