Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட வருட இடைவெளி….விஜய் சேதுபதிக்கான கதையுடன்…. ரீ-என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்…!!

நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகர் ராமராஜன் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராகவும் அதன்பின் இயக்குனராகவும் இருந்தவர் ராமராஜன். தற்போது இவர் நீண்ட வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் படம் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் 44 படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளேன். ஐந்து படங்களை இயக்கி உள்ளேன்.

இந்த 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதை அம்சம் கொண்டவையாக தான் இருந்திருக்கும். நான் புதிதாக இயக்கவுள்ள படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதை அம்சம் கொண்டதே ஆகும். ஆனால் எத்தனை கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் நான் பெண்களுக்கு எதிராக படமெடுக்க மாட்டேன்.

அதேபோல் நான் கடைசி வரை ஜெயலலிதாவின் தொண்டனாகவே இருப்பேன். நான் உருவாகியுள்ள இப்படம் விஜய் சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும்.இதைத் தவிர மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |