இன்று அதிமுகவில் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்,
முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக 500க்கும் அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தார்கள். காவல் துறை அனுமதி இல்லாத காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்டு அதிமுகவினர் அனைவருமே கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய ராஜரத்தினம் மைதானத்தில் தற்போது வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு காலையிலிருந்து காவல்துறை சார்பில் குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்ட நிலையிலும் கூட அவர்கள் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டு தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போல உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அடிப்படையில் உண்ணாவிரத போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்த போது, காவல்துறை சார்பில் பேட்டி எடுக்க கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எடப்பாடி பழனிசாமி கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இதனால் அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள், சக போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுகவினரும் போலீஸ் அராஜகம் என கோஷங்கள் எழுப்பினர்.
பேட்டி கொடுக்கக் கூடாது என்று சொன்ன போலீசாரை எச்சரித்த #எடப்பாடியார். #Police #DMKAtrocities #protest #EdappadiPalaniswami #பயமா_ஸ்டாலின் pic.twitter.com/bOi6smB0cS
— எடப்பாடியார் (@EPS4TamilNadu) October 19, 2022