Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK பாத்தாச்சு… DMK பாத்தாச்சு…. மோடி ஐயா தான் கரெக்ட்… முடிவு எடுத்த தமிழகம்… நிர்வாகிகளுக்கு அண்ணாமலை கட்டளை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ADMK ஆட்சியை பார்த்தாங்க, DMK ஆட்சியை பார்த்தார்கள். 18 மாதம் பார்த்தாங்க. மோடி அய்யாவுடைய ஆட்சிய பாக்குறாங்க. பாரதிய ஜனதா கட்சி செயல்பாட்டை பாக்குறாங்க. இது அவர்களாக அவர்கள் மனதிலேயே முடிவு செய்து இருக்கின்றார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும். மோடி ஐயா மறுபடியும் வரணும். இதில் மிகவும் முக்கியமானது..  அவர்கள் மனதில் நினைக்க கூடியதை வாக்காக மாற்ற வேண்டியது கட்சியினுடைய கடமை.

அவங்க நினைக்கலாம்…  வீட்ல இருக்கலாம்….  நான் பிஜேபிக்கு தான் ஓட்டு போடறேன். ஆனால் கட்சியினுடைய வலிமை என்பது அவர்களை சந்தித்து, ஓட்டு போடுவதற்கு ஒரு வழி,  அவர்களை  கட்சியில் இணைப்பதற்கு ஒரு வழி… அண்ணன் நீங்க இந்த பூத்துக்கு தான் போணும். இங்க தான் உங்களுக்கு ஓட்டு இருக்கு. இந்த வாக்குச்சாவடி நீங்க போய் ஓட்டு போடுங்க. அதற்கு வலிமையாக கட்சியினுடைய அடித்தளம் தேவைப்படுகிறது.

மண்டல், நம்முடைய பூத்து, அனைத்து பகுதிகளில் கூட கட்சி நண்பர்கள் வலிமையாக இருக்கும் பொழுது…  மக்களுடைய எண்ணம் வாக்காக மாறுவதற்கு கட்சியினுடைய அடிமட்ட தொண்டர்கள் அந்த வேலையை செய்து,  வெற்றியை மாற்றி கொடுக்க வேண்டும். அதற்கு தான் இதை போன்ற நிகழ்வுகள். இந்த நிகழ்ச்சி அரசியல் பேசுதற்கோ,  வேறு எதும் காரணம் இல்லை. அதற்குத்தான் இதை போன்ற நிகழ்வுகள். இவ்வளவு பேர் புதுசா இணைந்திருக்கிறார்கள். இளைஞர்கள் இருக்கிறார்கள்,  சகோதரிகள் வந்து இருக்கிறார்கள்.  இருந்தாலும் இதைப்போன்ற நிகழ்வுகள் கூட நடக்கின்ற அரசியலைப் பேச வேண்டிய கட்டாயம் இருக்கு என தெரிவித்தார்.

Categories

Tech |