கொரோனாவில் இருந்து தப்பிக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சில வழிகாட்டல்களை சொல்லியுள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, முதலமைச்சர் அடிக்கடி பேட்டில சொல்றாங்க. ஊடகங்களையும் நிறைய விளம்பரங்கள் வருது. மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் கொடுக்கின்றோம். தன்னார்வலர்கள் மூலமாக வீடுவீடாக போய் பிரச்சாரம் செய்கின்றோம். எதை செய்யலாம் ? எதை செய்யக்கூடாது ? செய்யக்கூடியது மாஸ்க் போடுவது, பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் போது, க்ளோவ்ஸ் போடுவது நல்லது.
கண்ணுக்கு தெரியாத வைரஸ்:
டெங்கு கொசு நம்ம கண்ணுக்கு தெரியும், மலேரியா கொசு நம்ம கண்ணுக்கு தெரியும், காலரா பரப்புற ஈ நம்ம கண்ணுக்கு தெரியும். ஆனா கோவிட் -19 வைரஸ் கண்ணுக்கு தெரியுமா ? யாராவது பார்த்து இருக்கீங்களா ? எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் ல தான் பார்க்க முடியும். அப்படி இருக்கும்போது அது எங்க வேணாலும் இருக்கலாம். அப்படி இருக்கும் போது, அரசினுடைய உத்தரவுகள், அரசின் அறிவுரைகள், அரசின் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
முறையாக பின்பற்றுங்க:
நடைமுறைகள் சாதாரணம் தான்…. அது பெரிய அளவுக்கு ஒன்னும் இல்ல… முகக்கவசம் அணியுங்க, சமூக விலகலை கடைபிடியுங்க, சானிடைசர் போட்டு கை கழுவுங்க. சானிடைசர் இல்லை என்றால் சோப்பு போட்டு அடிக்கடி கை கழுவுங்க, வீட்டில போய் சுத்தமாக குளிங்க இதனை நாம் பின்பற்றினால் கொரோனா வராது.
100 சதவீதம் பின்பற்றுறேன்:
அதுக்கப்புறம் கபசுரக் குடிநீர் குடிக்கலாம், அது நல்ல விஷயம், ஆரோக்கியமானது. அரசாங்கம் சார்பில் எல்லா இடத்துக்கும் கொடுத்துக்கிட்டு இருக்கோம். இதே மாதிரி வழக்கமான விஷயங்களை நாம் பண்ணினாலே கோவிட்-டில் இருந்து நாம் தப்பி விடலாம். அமைச்சராக நான் எல்லா ஏரியாவுக்கு போகின்றேன் என்றால் முடிஞ்ச அளவுக்கு இல்லை 100 சதவீதம் பின்பற்றுகிறேன்.
தற்காத்துக் கொள்ளலாம்:
கபசர குடிநீர் குடிச்சிட்டேன், காசினி டேப்லட் போட்டுடேன், வெளியில் வரும் போது கையுறை போட்டுட்டு வாரேன், மாஸ்க் போட்டு வாரேன், சோசியல் டிஸ்டன்ஸ் மெயிண்டன் பண்ணுறேன். இதனால கோவிட் -19ல இருந்து முடிஞ்ச அளவுக்கு தற்காத்துக் கொள்கின்றேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.