வசீகரமான முகம் பெற உதவும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் நமது முகத்தின் வசீகரம் அதிகரிக்கும் .இப்போது ஐஸ் கட்டிகளின் பயன்கள் பற்றி பார்க்கலாம்!!
முகப்பருக்களை போக்க;.
ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி சருமம் மிருதுவாகிறது முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 10 நிமிடங்கள் ஐஸ் கட்டியை கொண்டு மசாஜ் செய்யவேண்டும்.
தழும்புகள் மறைய;.
தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ் கட்டிகளை கொண்டு அழுத்தம் தருவதால் தழும்புகள் மறையும்.
தோலில் உள்ள துளைகளை நீக்க;.
முகத்தில் துளைகள் பெரிதாக இருப்பது உங்கள் முகத்தின் அழகை கெடுக்கும் .மேலும் இவை அழுக்குகளை எளிதில் உள்ளிழுக்கும் இதனால் முகப்பருக்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது தொடர்ச்சியாக ஐஸ் கட்டிகளை சருமத்தில் தேய்த்து வருவதன் மூலம் சருமத்தின் துளைகள் அகற்ற முடியும்.
முகம் பொலிவடைய;.
வெள்ளரிக்காயை அரைத்து அதனை ஐஸ் கட்டியாகும் வரை குளிர்விக்கவேண்டும் இதனை முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு முகம் பளிச்சென்று இருக்கும்.
கண் வீக்கம் குணமாக;.
சரியான தூக்கம் இல்லாவிட்டால் கண்கள் வீங்கி காணப்படும் கண்களை அழகாக காட்டன் துணியில் ஐஸ் கட்டியை வைத்து தினமும் காலையில் கண்களை சுற்றி மசாஜ் செய்யவேண்டும் இவ்வாறு செய்தல் கண் வீக்கம் குணமாகும்.
கருவளையங்களைப் போக்க;.
கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் முகத்தின் அழகைக் கெடுப்பதாக இருக்கும். வெள்ளரிக்காயை அரைத்து செய்யப்பட்ட ஐஸ் கட்டியை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தில் உள்ள கருவளையங்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.
எண்ணெய் பசை கொண்ட சருமம்;.
முகத்தில் எண்ணெய் வடிதல் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை இதிலிருந்து விடுபட ஐஸ் கட்டியால் மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும்.
முதிர்ந்த சருமத்திற்கு;.!!
ஐஸ்கட்டிகள் மூலம் மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் சுருக்கம் ஆவதை குறைக்கிறது இது முகத்திற்கு பொலிவை தருகிறது.