Categories
சினிமா தமிழ் சினிமா

“கருத்தை பாருங்க, கருத்து சொன்னவங்க யாருன்னு பார்க்காதீங்க”….. விஜய் சேதுபதி பேச்சு….!!!!!

நடிகர் விஜய் சேதுபதி சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி  நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மாணவர்களிடையே அவர் உரையாற்றும் போது பேசியதாவது, இந்த உலகத்தில் யாரும் யாரிடமும் தோற்றுப் போவதும் இல்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதும் இல்லை. அது ஒரு சிறிய நாடகம் மட்டுமே.

அறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது கேட்பது. பிறர் பேசுவதை முதலில் அதை நன்றாக கவனித்து கேட்க வேண்டும். பள்ளி, கல்லூரி எல்லாம் அதை தான் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் பாடங்கள் யாரோ ஒருவர் படித்து புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு பாடம் ஆக்கியது தான். அவ்வாறு நாம் படிக்கும் பாடங்களை நம் அறிவைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும். அதுதான் பகுத்தறிவு.

கடவுளாக இருந்தாலும் சக மனிதனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் கருத்தை பார்க்க வேண்டும். கருத்து சொன்னவரை பார்க்கக்கூடாது. கருத்து உங்களுக்கு பயன்படுகின்றதா என்பதை பார்க்க வேண்டும். கண்ணதாசன் சொன்னதைப் போல “தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவது இல்லையா” என்ற பாடலின் படி தன்னை உணர்ந்து செயல்படுவது தான் முக்கியம். நாம் தான் சிறந்த புத்தகம் என பேசியுள்ளார்.

Categories

Tech |