தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார். இந்த சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆளுநரை சந்திக்கிறார். கொரோனாவிற்கு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரக்கூடிய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நேரடியாக ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் விளக்குகிறார். ஏற்கனவே இரண்டு முறை இந்த சந்திப்பு நடைபெற்ற போது கூட தமிழக அரசு சார்பில் இது உறுதிபடுத்தப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ? இனிமே எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது ? என முதல்வர் ஆளுநரிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரக்கூடிய இந்த நிலையில் எடுத்து வரக்கூடிய நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அளிக்க வேண்டிய பொறுப்பு என்பது இருக்கிறது. அந்த அடிப்படையில் அரசு அடுத்து வரக்கூடிய நடவடிக்கை தொடர்பாக அறிக்கையை தமிழக அரசு தமிழக முதல்வர் ஆளுநரிடம் அளிக்கின்றார்.