மத்திய அரசு மின்சார மசோதா சட்டம் கொண்டுவந்துள்ளது பற்றி கருத்து சொல்லாத நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுறாங்க என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேசட்டும் என பதிலளித்தார். ஐயா ரஜினிகாந்த் அவர்களை பற்றி பேசவைத்து மின்சார திருத்த சட்டத்தை திசை திருப்பி திசை திருப்ப முடியாது.
மின்சாரம் சட்ட மசோதா எவ்வளவு பேராபத்தானதுனு தெரியும். ஐயா ரஜினிகாந்த் அவர்கள் வட இந்தியாவுக்கு போய் டெல்லிக்கு போய் சில முக்கியமான தலைவர்களை சந்திச்சாங்க. ஆளுநர சந்திச்சாங்க என்பது ஒரு நாள் செய்தி அவ்வளவுதான். ஆனால் இந்த மின்சாரம் மசோதா நிறைவேற்றப்பட்டால், எவ்வளவு பெரிய பேராபத்து வரப்போகிறது அப்படிங்கிறது எப்படி மறக்க முடியும் ?
ஒவ்வொரு நாளும் அவர் அதை திசை திருப்பிட்டே இருப்பாரா ? அதை ஏன் அவர் மேல நீங்க அப்படி ஒரு பழியை போடுறீங்க. அவர் சந்திக்கணும் நினைச்சாரு சந்திச்சுட்டாரு. மின்சார மசோதாவை நாங்கள் கொண்டு வர போறோம் அதுக்கு நீங்க வாங்க. அப்படின்னு அவர ஒவ்வொன்னுக்கும் போய் சந்திக்க சொல்றது இல்லையே.
அதனால அவர் மேல நாம ஏன் அப்படி ஒரு குற்ற சாட்ட வைக்கணும். அவருக்கு தோணிருக்கும் அவர் சந்திச்சு இருக்கலாம். அது அத போய் அப்படி ஒன்னும் சொல்ல வேண்டியது இல்லை. அவருக்கு வேலை என்ன ? ஒவ்வொரு சட்டத்தையும் கொண்டு வரப்பவும் அவர காட்டி திசை திருப்புறதா அவரு வேலை என தெரிவித்தார்.