Categories
தேசிய செய்திகள்

இங்க பாருங்க…. ஒரு ஊரே சேர்ந்து என்ன பண்ணுறாங்க தெரியுமா…? ஆச்சர்யமான வீடியோ…!!

ஒரு ஊரே ஒன்று கூடி வீட்டை தூக்கி செல்லும் காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒற்றுமையே பலம் என்ற பழமொழி பொதுவாகவே உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக நாகலாந்து மாநில மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நாகா மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வீடுகள் மிகவும் எளிய முறையில் தான் கட்டப்பட்டு இருக்கும். இதையடுத்து கிராமத்தில் இருந்த வீடு ஒன்றை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வீடு மரக்கட்டைகளை கொண்டு மேற்புறம் தகரம் போட்டு மூடப்பட்டிரருக்கும். மேலும் வீட்டை தூக்கிச் செல்வதற்கு வசதியாக சுற்றிலும் மூங்கில் குச்சிகளை வைத்துக் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் கிராம மக்கள் 50 பேர் சேர்ந்து கொண்டு அந்த வீட்டை அப்படியே தூக்கி வேறொரு பகுதிக்கு அனைவரும் கொண்டு சென்றுள்ளனர். எடையை தாங்கிப் பிடிப்பதற்காக சுழன்றபடியே கிராம மக்கள் வீட்டை கொண்டு சென்றுள்ளனர். இதே ஊரை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. எளிதாக தூக்கி செல்வதற்கு காரணம் அதன் கட்டுமான பொருட்கள் இலகுவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |