Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் மீது லுக் அவுட்நோட்டீஸ்- அமலாக்கத்துறை அதிரடி …!!

ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் லுக் அவுட்நோட்டீஸ் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என்று தெரிந்தும் 7.30 மணி முதல் அமலாக்கதுறையினர் இருந்து வருகின்றனர்.

Image result for அமலாக்கத்துறை ப.சிதம்பரம்

மேலும் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்து விட வேண்டும். அவர் எங்கே இருப்பார்.ஏதேனும் வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்று இருப்பாரா என்று அவரின் விட்டிலேயே அமலாக்கத்துறையினர் இருந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ப.சிதம்பரம் ஏதேனும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட்நோட்டீஸ் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது.

Categories

Tech |