ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி படத்தின் ஷுட்டிங்கை தொடங்கியுள்ளார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. மும்பையைக் கலக்கய தாவூத் இப்ராகிம், ஹாஜி மஸ்தான் போன்ற டான்களின் வரிசையில் பெண் மாஃபியா ராணியாக வலம் வந்தவர் கங்குபாய் கேதேவாலி. பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இவர், பின்னாளில் மாஃபியா கும்பலின் தலைவியாக பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்.
இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பிரபல எழுத்தாளர் ஹுசைன் ஸாடி மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை தழுவி இயக்குநர் பன்சாலி மற்றும் ஜெயன்திலால் காடா திரைக்கதை அமைக்க கங்குபாய் கதியாவாடி என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது.
இதுகுறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிப்பு வெளியான நிலையில், படத்தில் கங்குபாயாக, ஆலியா பட் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இந்தப் படத்தின் ஷுட்டிங்கை இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தொடங்கியுள்ளார். படத்தை 2020 செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் கமிட்டானவுடன் நடிகை ஆலியா பட் தனது ட்வீட்டரில், ‘நீங்கள் கேள்விப்பட்ட பெயர் ஆனால் அறிந்திராத கதை’ என்று குறிப்பிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.
Look what Santa gave me this year 📽❤️#GangubaiKathiawadi 11th Sept 2020 #SanjayLeelaBhansali @bhansali_produc @prerna982 pic.twitter.com/KzRiTjhmWO
— Alia Bhatt (@aliaa08) December 27, 2019