Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொள்ளையும் செய்து, கொலையும் செய்வார்கள் – முக.ஸ்டாலின் அறிக்கை …!!

தூத்துக்குடி தூப்பாக்கிசூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டான இன்று திமுக தலைவார் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் இரண்டாம் ஆண்டான இன்று மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்ணீர் நினைவுகள் என்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ரத்த காயங்கள் ஆறவில்லை, சொந்த நாட்டு மக்கள் மீது எடப்பாடி பழனிச்சாமியின் அரசாங்கம் எதிரி நாட்டு இராணுவத்தைப் போல நடத்திய குண்டு வேட்டையின் சத்தம் இன்னும் எதிரொலிக்கிறது. தூத்துக்குடி மக்களின் உறக்கத்தை அனுதினமும் கலைக்கிறது.

நானே மீடியாவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று பொய் சொன்ன முதலமைச்சரின் கல் நெஞ்சத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

100 நாட்கள் அமைதியாக போராடிய மக்களை கலைக்க வன்முறையை விதைத்து ஏதுமறியாத13  பேர் உயிர்களை பலிகொண்ட நாள் இன்று.

இந்த பழியை  எத்தனை ஆண்டுகளானாலும், பழனிச்சாமி அரசினால் துடைக்க முடியாது, அவர்கள் கரங்களில் உள்ள ரத்தக் கரை கடல் நீர் முழுவதும் கொண்டு கழுவினாலும் போகாது.

விசாரணை ஆணையம் என்ற நாடகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை இன்னமும் வரவில்லை. அந்த ஆணையம் உண்மையில் சுட்டிக்காட்ட வேண்டிய குற்றவாளிகள் கோட்டையில் அல்லவா இருக்கிறார்கள் ?

இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையுடன் சேர்ந்து கொலையும் கூசாமல் செய்பவர்கள் என்று நாட்டுக்கு நிரூபித்த நாள் இன்று. தென் பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கி சப்தத்தின் எதிரொலித்து ஓயவே ஓயாது என்று அறிக்கையில் குறிப்பிடுள்ளார்.

Categories

Tech |