Categories
கிரிக்கெட் விளையாட்டு

லார்ட்ஸ் வெற்றி : இந்திய அணிக்கு ஜாம்பவான் சச்சின் பாராட்டு ….!!!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வெற்றியை ருசித்த இந்திய அணிக்கு  முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் .

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் ,’ இந்த டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு தருணத்தையும் பார்த்து ரசித்தேன்.

இக்கட்டான கட்டத்தில் இருந்து இந்தியா மீண்டு எழுந்ததும், மன உறுதியும் என்னை பொருத்தவரை தனித்து நிற்கிறது .மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளனர் ‘ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே ‘போராடி எழுச்சி பெற்ற இந்தியா வெற்றிக்கு தகுதியான அணி ‘என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |