ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லை பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நீளமான வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், பெலாரஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளோடு எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அந்நாடுகளின் சரக்கு வாகனங்களுக்கு தடை அறிவித்திருக்கின்றன.
எனவே, போலந்து நாட்டின் எல்லை பகுதியான Kukuryk- Kozlovichi-ல் அதிக தொலைவிற்கு லாரிகள் நீளமான வரிசையில் காத்திருக்கின்றன. விரைவில் கெட்டுப்போகக்கூடிய உணவு பொருட்கள், மருந்து விநியோகம் போன்ற பல சேவைகள் இதனால் தடைபடும் என்று ஓட்டுநர்கள் கூறியிருக்கிறார்கள்.