ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி ஜல்லியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து அதில் சிக்கிய ஓட்டுநரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அதிர்ஷ்டவசமாக காயமின்றி அந்த ஓட்டுனர் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று ராட்சத கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரம் உதவியோடு சாலையில் கவிழ்ந்து கிடந்த அந்த லாரியை மீட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.