சுண்டல் கடலை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி தடுப்புசுவர் மீது மோதியதில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு லாரியில் சுண்டல் கடலை மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டு கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார். அந்த லாரி நேற்று காலை கரூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புசுவரின் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இதில் டிரைவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனைக் கண்டு அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய ரபீக்கை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.