Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் போட்ட டிரைவர்…. சுற்று சுவரை இடித்து நின்ற லாரி…. கோவையில் பரபரப்பு…!!

விபத்துக்குள்ளான லாரி மருத்துவமனையின் சுற்று சுவர் மீது மோதி நின்று விட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று  புறப்பட்டுள்ளது. இந்த லாரியை மாரிமுத்து என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சூலூர் அரசு மருத்துவமனை அருகில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கல்லூரி மாணவர் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் அவர் மீது மோதாமல் இருக்க மாரிமுத்து சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் நின்ற மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதி விட்டது.

இதனையடுத்து விபத்துக்குள்ளான லாரியும், வேனும் சூலூர் அரசு மருத்துவமனையின் சுற்றுப்புற சுவரை உடைத்து விட்டு உள்ளே நுழைந்து விட்டது. இந்த விபத்தில் லாரி, வேன் டிரைவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர் போன்றோர் அதிர்ஷ்டவசமாக தப்பித்து விட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |