Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை எதும் ஆகல… அடுத்தடுத்து சரிந்த மின்கம்பிகள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கனரக லாரி ஏற்படுத்திய விபத்தில் 2 மின்மாற்றிகள் மற்றும் 4 மின்கம்பங்கள் ரோட்டில் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து திருமுருகன்பூண்டி செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் அருகில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் அவ்வழியாக வந்த லாரியின் மேல் பகுதி மின்கம்பியில் சிக்கியதால் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த மின்மாற்றி சரிந்து விழுந்து விட்டது. இதனை அடுத்து மற்றொரு மின்மாற்றி மற்றும் 4 மின்கம்பங்கள் சரிந்து விழுந்து விட்டதாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சமயம் அப்பகுதியில் மின்தடை இருந்ததால் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மின்மாற்றி மற்றும் கம்பங்களை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் மின்வாரிய அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |