நூல் பண்டல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியிலிருந்து நூல் பண்டலை ஏற்றிக்கொண்டு காங்கேயம் வழியாக திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று உள்ளது. இந்த லாரியை ஸ்டாலின் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது காலை 11 மணி அளவில் சக்கராசனம் பாளையம் பிரிவு நால்ரோடு அருகே சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரியை தூக்கி சாலையின் ஓரமாக நிறுத்தி உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.