Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாதூர்யமாக செயல்பட்ட டிரைவர்… சட்டென கவிழ்ந்த லாரி… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் மாடசாமி என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாரில் இருந்து லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு உடன்குடி நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது லாரி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் புளியங்குளம் வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிரே தனியார் கெமிக்கல் ஆலையிலிருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து இரண்டு கார்கள் ஆசிட் ஏற்றி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறிய காயத்துடன் டிரைவர் மாடசாமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். மேலும் சரியான நேரத்தில் பிரேக் போட்டதால் ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது மோதி மிகப் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செய்துங்கநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |