கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 310 பேர்வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது .
மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தநிலையில் இலங்கை அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்டது. இந்நிலையில் தற்போது குண்டுகள் நிரப்பப்பட்ட சிறிய வேன் மற்றும் லாரி கொழும்பு நகருக்குள் நுழைந்ததாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.