Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கனமழை” சாலை வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லாரி….. திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் பெய்து வந்த கனமழையின் காரணமாக சாலையில் ஓடிய வெள்ள நீரில் லாரி சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் முழுவதும் பரவலாக பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

Image result for சாலை வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லாரி

இதன்காரணமாக வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் திருப்பூர் அருகே வெள்ளநீரில் லாரி வந்து கொண்டிருக்கும் போது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவல்துறை  அதிகாரிகளும் விபத்து குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |