லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் பள்ளி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மாசிலாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் மாசிலாமணி உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் மாசிலாமணி பள்ளிக்கு உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பெருந்தொழுவு சாலை தனியார் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சிமெண்ட் கலவை எந்திர லாரியும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுக்கொன்று மோதியது.
இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாசிலாமணி லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினருக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாசிலாமணியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.