மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் முனிவேல் என்ற லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் டவுன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.