Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற இராணுவ வீரர்கள்… எதிரே வந்த லாரி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

லாரி மோதியதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாறைகொட்டாய் பகுதியை  சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் மற்றும் பிரசாந்த்.  கோவிந்தராஜ் பெங்களூருவில் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். பிரசாந்த் ஹைதராபாத்தில்  ராணுவ பயிற்சி பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் விடுமுறைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.  கோவிந்தராஜிற்கு விடுப்பு முடிந்ததால்  இன்று பெங்களூருவுக்கு செல்வதாக இருந்தார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் பாறைக்கொட்டாய் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர் . அப்போது சின்னமுத்தூர் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத லாரி இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது . இதில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த கோவிந்தராஜை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கோவிந்தராஜ்  மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அடையாளம் தெரியாத லாரி மோதிய விபத்தில் இரண்டு  ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |