Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முந்திசெல்ல முயன்ற லாரி…. உடல் நசுங்கி பலியான முதியவர்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

லாரி மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடிவேல் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் போயம்பாளையத்திலிருந்து குன்னத்தூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டியன் நகர் அருகில் சென்று கொண்டிருந்தபோது மொபட்டை முந்திச் சென்ற கண்டெய்னர் லாரி அருணாச்சலம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருணாச்சலம் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருணாச்சலத்தின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உத்திரபிரதேசம் பகுதியில் வசிக்கும் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |