சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாய பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் சின்னசாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னச்சாமி வயலுக்கு செல்வதற்காக தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து சின்னச்சாமி தனது சைக்கிளில் பெரம்பலூர்-அரியலூர் மெயின் ரோட்டை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற மினி லாரி இவரது சைக்கிள் மீது மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சின்னச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவரான வைத்தீஸ்வரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.