சாலையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள குமணன் சாவடியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றதால் அப்பகுதியில் ஏராளமானோர் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் தண்ணீர் ஏற்றி சென்ற லாரி சாலையின் நடுவே பழுதாகி நின்றதால் வாகனத்தை இயக்க முடியாமல் டிரைவர் சிரமப்பட்டுள்ளார்.
மேலும் நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரியால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையின் நடுவே பழுதாகி நின்ற லாரியை தள்ளி சென்று ஓரமாக நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்தனர்.