Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்பு ஏற்றி சென்ற லாரி…. வழிமறித்த காட்டு யானை…. போக்குவரத்து பாதிப்பு….!!

லாரியை வழிமறித்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான காரப்பள்ளம் அருகில் குட்டியுடன் யானை நின்று கொண்டிருந்தது. மேலும் கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை பார்த்த யானை வழிமறித்து லாரியின் பின்னால் ஓடியது.

இதனால் அச்சமடைந்த ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டார். இதனைபார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அனைவரும் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |