Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எறிந்த லாரி…. சேதமடைந்த நெல் மூட்டைகள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நெல் முட்டைகள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் இருந்து கேரளாவுக்கு லாரி ஒன்று நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெதப்பம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து உடுமலை தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் தண்ணீர் ஊற்றி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான நெல் மூட்டைகள் எரிந்து நாசமானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

Categories

Tech |