லாரியின் மீது ஏறிகுண்டு வீசியதில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவமானது அனைவரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் Mawach Goth என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த நான்கு குழந்தைகள் மற்றும் ஆறு பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அதில் முதற்கட்டமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எறிகுண்டை வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர்கள் குண்டை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக 10 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.