கார் மரத்தில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேடவாக்கம் பகுதியில் வசிப்பவர் செந்தில்நாதன். இவர் தன்னுடைய குடும்பத்தோடு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செந்தில்நாதன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.