சுவை மற்றும் வாசனை, இவை இரண்டையும் இழப்பது கொரோனா பாதித்த சிலருக்கு கொரோனா அறிகுறியாக இருக்கிறது.
கொரோனாவால் அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புகளை சந்தித்த இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 நோயாளிகளிடம் செல்போன் மூலம் உங்கள் நாவின் சுவையிலும், மூக்கின் நுகரும் தன்மையிலும் திடீரென மாற்றம் ஏற்பட்டதா என்று மருத்துவர்கள் நோயாளிகள் கேள்வி கேட்கிறார்கள். 200 நோயாளிகளில் 130 பேர் தங்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது 65 சதவிகிதம் பேர் மற்ற அறிகுறிகள் உங்களுக்கு என்னவெல்லாம் இருந்தது என்று மருத்துவர்கள் கேட்க, நோயாளிகள் கடும் சோர்வு 68.3 % , வரட்டு இருமல் 60.4%, காய்ச்சல் 55.5%, தெரிவித்துள்ளனர். சுவை, வாசனை இழப்பு மட்டுமே அறிகுறிகள் என 3% . இவர்களுக்கு காய்ச்சலோ வறட்டு இருமலை வரவில்லை. சுவை தெரியல, வாசனையை நுகரும் தன்மையும் போய்விட்டது என்று சொல்லி சொல்றவங்க 3%.
உலகில் கொரோனாவில் இருந்து நான்கு பேர் குணமடைந்தால் ஒருவர் உயிரிழக்கிறார். அதாவது உலகத்தில் கொரோனா பாதித்து முடிவு தெரிந்தவர்கள் ஒன்று குணமடைந்து வீட்டுக்கு போய் இருப்பாங்க, அல்லது மரணமும் அடைந்து இருப்பார்கள். அந்த சதவீதம் பார்க்கும் போது 20% பேர் உயிரிழந்துள்ளனர், 80 % பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 4 பேர் குணமடைந்தால், ஒருவர் உயிரிழக்கிறார். இது உலகளவில் கிடைத்த தகவல்.