தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று லொஸ்லியா கோபத்தின் உச்சத்தை அடைந்தார்.
இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காதல் சண்டை என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யா மற்றும் முகின் காதலித்து வருவதாக மீரா மற்றும் மதுமிதா மற்ற போட்டியாளர்களிடம் சென்று புறம் பேசுவதாக புகார் எழுந்த நிலையில், ஐஸ்வர்யா,சாக்ஷி,வனிதா ஆகியோர் கும்பலாக சேர்ந்து சென்று மதுமிதாவிடம் சண்டையிட்டனர். தீவிரமடைய பிக்பாஸ் வீடானது பிரளயமானது. இதனை தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த லொஸ்லியா சண்டையை கட்டுப்படுத்த calm down,leave it பிரச்சினையை இத்துடன் விட்டு விடுங்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா மனது புண்படும்படி கோபத்தில் பேசிவிட, மனதுடைந்து பாதி சாப்பாட்டிலேயே நாற்காலியை தூக்கி எறிந்துவீட்டு சென்றார் லொஸ்லியா. அதன்பின் சக போட்டியாளர்கள் சென்று லொஸ்லியாவை சமாதானம் செய்தனர்.