பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் எளிதில் ரசிகர்களிடையே பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமாகி ரசிகர்களால் பெரிதளவில் கவரப்பட்டார். இதையடுத்து லாஸ்லியா தமிழ் சினிமாவிற்கு பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://www.instagram.com/p/CSEEDhtB4N4/?utm_medium=share_sheet
மேலும் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன், யோகிபாபு, லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கூகுள் குட்டப்பா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.